நான்கு நாட்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது ஏ.ஆர் ரகுமான் மகனின் பாடல்

ஒரு நிமிட பாடல்
இசைக்கலைஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் ஆகியோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுகாக பாடல் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

இதன் மூலம் புது முக இசைக்கலைஞர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இந்த நோக்கத்தில் Meta நிறுவனம் ஒரு நிமிட பாடல் என்று ஒன்றை அறிமுகமப்படுத்தி உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பென்னி தயாள் போன்ற பிரபலங்கள் ஒரு நிமிடத்திற்கு இசையமைத்து வெளியிட்டனர்.

ஏ.ஆர் ரகுமான் – அமின்
இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் மகன் அமின் “அடியே சோனாலி” என்ற ஒரு நிமிட பாடலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு ஏ.ஆர் ரகுமான் மற்றும் குட்டி ரேவதி பாடல் எழுதியுள்ளனர்.

இப்படல் வெளியான நான்கு நாட்களில் 2 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இப்பாடலின் வெற்றியை குறித்து பேசிய அமின்,” சமீபகாலமாக இன்ஸ்டகிராமில் பல பாடல்கள் கண்டெடுக்கபடுகிறது. ஒரு நிமிட பாடலை அறிமுகப்படுத்திய Meta நிறுவனத்துடன் இணைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.