6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கும் பிலிப்ஸ் நிறுவனம்

லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் பிலிப்ஸ் நிறுவனம் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்நிறுவன ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 5% என கூறப்படுகின்றது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6,000 பணிகளை அகற்றுவதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது . டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், அதன் லாபத்தை அதாவது பொருளாதாரத்தை மீட்டெடுக்க 6,000 ஊழியகளை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சியடைந்த சுவாச சாதனங்களை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த 6,000 பணிகளில் பாதி வேலைகள் இந்த ஆண்டு குறைக்கப்படும் என்றும் , மற்ற பாதி 2025 க்குள் குறைக்கப்படும் எனவும் பிலிப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மறுசீரமைப்பு கடந்த அக்டோபரில் அதன் பணியாளர்களை 5% அல்லது 4,000 வேலைகளைக் குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வருவதாகவும் கூறப்படுகிறது.