பிரபல டப்பிங் ஆர்டிஸ் திடீர் மறைவு!

ஸ்ரீனிவாச மூர்த்தி
தெலுங்கு சினிமாவின் பிரபல டப்பிங் ஆர்டிஸ்டாக வலம் வந்தவர் ஸ்ரீனிவாச மூர்த்தி. இவர் 1990 -ம் ஆண்டு வெளியான ஒகே ஒக்கடு படத்தின் மூலம் திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தார்.

தமிழில் விக்ரம், அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களையும் தெலுங்கில் ஸ்ரீனிவாச மூர்த்தி தான் டப் செய்துள்ளார்.

மேலும் இவர் மோகன்லால், ஷாருக்கான், சூர்யா, ஜெயராம், மாதவன் போன்ற பல பிரபலங்களின் படங்களுக்கும் டப் செய்துயிருக்கிறார்

மறைவு
இந்நிலையில் ஸ்ரீனிவாச மூர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.