வெற்றி விழாவில் கதாநாயகியுடன் மது அருந்திய பிரபல நடிகர்.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஹனி ரோஸ், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.104 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். வீரசிம்ம ரெட்டி படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர். வெற்றி விழாவில் பாலகிருஷ்ணாவுடன் ஹனி ரோஸ் மது அருந்திய புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் இருவரும் கை கோர்த்து கொண்டு மது அருந்தும் புகைப்படங்கள் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.