குக்வித் கோமாளி புகழ் சிவாங்கி லேட்டஸ்ட் புகைப்படம்

சிவாங்கி
சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி, அதன்பின் குக் வித் கோமாளி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் சிவாங்கி.

சின்னத்திரையின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற சிவாங்கி தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்க துவங்கிவிட்டார்.

ஆம், கடந்த ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் டான் மற்றும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்.

மேலும் தற்போது சில படங்களிலும் கமிட்டாகியுள்ளார். அவையெல்லாம் விரைவில் வெளியாகவுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் சிவாங்கி.

சிவாங்கியா இது
இவர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் பரதநாட்டியம் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த பலரும், இது நம்ம சிவாங்கியா என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..