வாரிசு படம் தொடர்பில் வெளிவரும் நெகட்டிவ் விமர்சனம்

வாரிசு
வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. விஜய் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் முடிந்துள்ள நிலையில், இன்று மாலை இப்படத்தின் ட்ரைலரும் வெளிவந்தது.

ஃபேமிலி ஆக்ஷன் எண்டர்டெயினராக அமைத்திருந்த இந்த ட்ரைலர் யுடியூப்பில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. வாரிசு திரைப்படத்தின் சென்சார் சமீபத்தில் முடிந்தது..

நெகட்டிவ் விமர்சனம்
இந்நிலையில், வாரிசு படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்களாம். அதன்படி, வாரிசு படம் முழுக்கமுழுக்க ஆக்ஷன் எண்டர்டெயினர், ஃபேமிலி ட்ராமாவாக அமைந்துள்ளது என்றும், இந்த படம் மக்களிடம் சென்டிமென்டில் வரவேற்பை பெற்றுவிட்டால் கண்டிப்பாக சூப்பர்ஹிட்டாகும் என கூறியுள்ளனர்.
அதே போல் ஒரு வேலை படத்தில் இடம்பெறும் செண்டிமெண்ட் மக்களிடம் எடுபடவில்லை என்றாலும், படம் மாபெரும் தோல்வியடையவும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளார்களாம். ஒரு பக்கம் பாசிட்டிவான விமர்சனம் இருந்தாலும், மறுபக்கம் நெகட்டிவான விமர்சனமும் கூறப்பட்டுள்ளது.