மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள்

மாறிவரும் வாழ்க்கைகசூழ்நிலையால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதை அவர்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. எந்தவித காரணங்களும் இல்லாமல் குழந்தைகள் வெளிப்படுத்தும் அழுகை, கோபம், எரிச்சல், கவலை, போன்ற உணர்வுகளின் வழியாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும்.

பெற்றோருக்கு இடையே ஏற்படும் மோதல்கள், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், உடல் நலக்குறைபாடு, தேர்வில் ஏற்படும் தோல்வி போன்ற காரணங்களாலும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். குழந்தைகளிடம் பேசுவதற்கும் விளையாடுவதற்கும் பெற்றோர் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் பிணைப்பு அவர்களை மனம் விட்டு பேச வைக்கும். இதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க முடியும்.