வாரிசு தயாரிப்பாளருக்கு அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு!!

வாரிசு விழாவில் ரசிகர்கள் செய்த காரியத்தால் தயாரிப்பாளர் தற்போது அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

வாரிசு
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் மற்றும் வாரிசு பட நட்சத்திரங்கள் எல்லோரும் கலந்துகொண்டனர்.

விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் விழாவுக்கு வந்து இருந்தனர். விழா முழுவதும் ரசிகர்களின் மாஸ் ரெஸ்பான்ஸால் அரங்கம் அதிர்ந்தது நேற்று பல வீடியோக்களில் வந்தது.

தயாரிப்பாளருக்கு அபராதம்
இந்நிலையில் நேற்று நடந்த விழாவில் நேரு ஸ்டேடியத்தில் இருக்கும் அதிக இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

அது பற்றி முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு வாரிசு தயாரிப்பாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என அவர்கள் கூறி இருக்கின்றனர்.