தமது இரட்டை குழந்தைகளுடன் கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து கூறிய விக்கி நயன்

நயன்தாரா
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகை. இவர் நடிப்பில் அண்மையில் கனெக்ட் எனும் திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

இதன்பின் திருமணமாகி சில மாதங்களான நிலையில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை இந்த ஜோடி பெற்றுக்கொண்டதாக அறிவித்தனர்.

இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும் சில நாட்களிலேயே நயன்தாரா தரப்பில் இருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அழகிய புகைப்படம்
இந்நிலையில், கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு என இரு பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்து தனது மனைவி நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

இதில் இரட்டை குழந்தைகளை உயிர், உலகம் என குறிப்பிட்டு நயன்தாரா, விக்கி குடும்பத்தின் கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)