கமலுடன் ரகுவரன் இணைந்து நடிக்காமல் போனதற்கு இதுதான் காரணமாம்!

ரகுவரன்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராய் இருந்தவர் ரகுவரன். இவர் 1982- ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

தொடக்கத்தில் ரகுவரன் ஹீரோவாக நடித்திருந்தாலும், இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் தான் மக்களால் வரவேற்கப்பட்டது. முத்து, பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களில் கொடூரமான வில்லனாக நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

1996 -ம் ஆண்டு நடிகை ரோஹிணியை திருமணம் செய்து கொண்டார். 8 வருடங்கள் நீடித்த இந்த திருமண வாழ்க்கை கடந்த 2004ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. இதன்பின், நடிகர் ரகுவரன் கடந்த 2008 ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கமல் ரகுவரன் கூட்டணி

சமீபத்திய பேட்டியில் ” அனைத்து பெரிய நடிகர்களுடன் நடித்த ரகுவரன் ஏன் கமலுடன் மட்டும் நடிக்கவில்லை” என ரோகிணியிடம் கேள்வி கேட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “கமல் நடித்து வெளியான நாயகன் படத்தில் நாசர் நடித்த கதாபாத்திரத்தில் ரகுவரனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது அவர் வேறொரு படத்திற்காக முடியை நீளமாக வளர்த்திருந்தார். இதனால் கமலுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போனது” என்றார் ரோகிணி.