ஹன்சிகா திருமணத்தை அடுத்து ஹன்சிகா வீட்டில் நிகழ்ந்த சோகம்

ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மற்றும் அவரது நீண்டநாள் காதலர் சொஹைல் கத்தூரியா ஆகியோர் திருமணம் விமரிசையாக ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ஹன்சிகா அவரது தோழியின் முன்னாள் கணவரை தான் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.

திருமணம் முடிந்து தற்போது ஹன்சிகா அவரது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். நடிப்பதை நிறுத்தப்போவதில்லை தொடர்ந்து நடிப்பேன் என கூறி இருக்கும் ஹன்சிகா அடுத்து பல படங்களில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார்.

குடும்பத்தில் எதிர்பார்க்காத அதிர்ச்சி
திருமணம் நடந்த அடுத்த ஒரே வாரத்தில் தற்போது ஹன்சிகாவின் சகோதரர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

இதனால் ஹன்சிகா திருமணம் முடித்த ஒரே வாரத்தில் குடும்பத்தினர் சோகம் அடைந்து இருக்கின்றனர்.