பல ஆண்டுகளிற்கு பிறகு மனைவி கர்ப்பமானதை நினைத்து மகிழ்வடையும் ராம் சரண் தம்பதியினர்

ராம் சரண்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. நடிகர் ராம் சரண் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ராம் சரண் மனைவி கர்ப்பம்
இந்நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு தங்களுடைய முதல் குழந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம் இந்த ஜோடி.

ஆம், தனது மருமகள் உபாசனா கர்ப்பமாக இருப்பதாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ராம் சரண் – உபாசனா ஜோடிக்கு ரசிகர்களுக்கு, திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.