பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கான எச்சரிக்கை!

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸில் கொள்ளையன் ஒருவன் தபால் ஊழியர் போன்று வேடமிட்டு ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதுவரை 691,000 யூரோ பணத்தினை போலி தபால் ஊழியர் கொள்ளையிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை Yvelines இவ்லின் நகர பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.

இந்நிலையில் கைதான சந்தேக நபர் நீண்ட நாட்களாக தபால் நிலைய ஊழியர் போன்று வேடமணிந்து கடிதங்களை திருடியும், காசோலைகளை திருடியும் உள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.