காதல் கணவருடன் இருக்கும்புகைப் படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட சாலினி

ஷாலினி அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிகையை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். நேற்று கூட அஜித் தனது மனைவியுடன் கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளிவந்தது.

இன்ஸ்டாகிராமில் ஷாலினி
இந்நிலையில், நடிகை ஷாலினி முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கை துவங்கியுள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராமில் முதல் பதிவாக தனது காதல் கணவர் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டுள்ளார்.

ஷாலினி சமூக வலைத்தளத்தை பயன்படுத்த துவங்கியுள்ளார் என்பதை அவருடைய தங்கை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அறிவித்துள்ளார்.

இதோ பாருங்க..