கொழும்பில் தொடர்மாடியிலிருந்து வீசி எறியப்பட்ட குழந்தை!

கொழும்பில் தொடர்மாடியில் இருந்து குழந்தையொன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பில் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான குழந்தையின் மாமாவால் குழந்தை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.