விசா தொடர்பில் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா விதிகளை அறிவித்துள்ளது.

புதிய விதிகளில்படி, ஒரு பயணி தனது முதல் பெயர் மற்றும் குடும்பப்பெயர் இரண்டும் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பாஸ்போர்ட்டில் முதல் பெயர் மற்றும் குடும்பப்பெயர் குறிப்பிடப்படாத பயணிகள் ஐக்கிய அரபு அமீகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முறையான குடியிருப்பு அனுமதி அல்லது வேலைக்கான விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.