வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் போது பதிவாளர் நாயகத்திடம் இருந்து அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர் எந்தவொரு சட்ட அதிகாரியிடமிருந்தும் பிடியாணை பிறப்பிக்கப்படாதவறாக இருக்க வேண்டும் உள்ளிட்ட இரண்டு நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 10 மாதங்களில் 1073 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் சம்மதத்துடன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிரஜைகளை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.