யாழில் அழைப்பானை வழங்க சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் அழைப்பாணை ஒன்றை வழங்க பெண் ஒருவரின் வீட்டிற்கு நேற்றைய தினம் சென்ற பொலிஸார் அங்கு கசிப்பு விற்பனை இடம்பெறுவதை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் கசிப்புடன் குறித்த பெண்ணைக் கைது செய்ததுடன் 10 போத்தல் கசிப்பும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் கட்டைக்காடு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகின்றது.

அத்துடன் கடந்த காலங்களிலும் பொலிஸார் இவரைப் பலமுறை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், கசிப்பு விற்பனையைக் கைவிடவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது கிராமத்தில் இடம் பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுத்து.அதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.