பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ரியல்மி நிறுவனம்

ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் துணை தலைவர் சு குய் விரைவில் அறிமுகமாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிவித்து இருக்கிறார்.

GT சிரிஸ் துவங்கி ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சீரிஸ்களின் மேம்பட்ட வெர்ஷன், முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் இடம்பெற்று இருக்கும். இதுதவிர புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் இனி ஒவ்வொரு ஆண்டும் இரு GT நியோ சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யவும் ரியல்மி தட்டமிட்டுள்ளது.

இதோடு இரண்டு நம்பர் சீரிஸ் போன்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ரியல்மி ஈடுபட்டு வருகிறது. இதில் ஒரு மாடல் ஆண்டின் மத்தியிலும், மற்றொரு மாடல் ஆண்டு இறுதியிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் வழக்கமான GT சீரிஸ் மாடல் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இவை தவிர புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை பட்ஜெட் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வருவது உறுதியாகி இருக்கிறது. எனினும், இந்த மாடல் எப்போது வெளியாகும் என்பது பற்றி ரியல்மி அதிகாரி எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் ரியல்மியின் ஃபோல்டபில் போன் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.