இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள் காரணம் அல்ல

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு மருந்தான ஆர்டிஎக்ஸை திறந்த சந்தையில் பெற்றுக் கொள்ள முடியாது. இது எங்கும் கிடைக்கவும் கிடைக்காது. இது அமெரிக்காவில் மாத்திரமே ஒரு தொழிற்சாலையில் தயார் செயயப்படுகின்றது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

வெளியில் எங்கும் இந்த மருந்து கிடைக்காது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்த வெடிமருந்து கிடைக்காது. இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்திற்கும் இந்த மருந்து கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 7 பேர் இந்த வருடத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மறைக்கப்பட்ட உண்மை என்ன?

இந்த நிலையில், அவர்கள் சார்பாக பல வருடங்களாக வாதிட்டு வந்த மூத்த வழக்கறிஞர் துரைசாமி இது குறித்து தொடர்ந்தும் விபரிக்கையில்,

அத்தோடு அமெரிக்க அரசாங்கமானது எல்லா அரசாங்கத்திற்கும் அந்த ஆர்டிஎக்ஸ் மருந்தை வழங்கிவிடாது. குறிப்பிட்ட நாடுகளுக்கு மாத்திரமே அமெரிக்க அரசாங்கம் ஆர்டிஎக்ஸ் மருந்தை வழங்கும். அதில் இந்தியாவும் ஒன்று.

அப்படியென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் இந்த மருந்து கிடையாது, இலங்கை இராணுவத்திடமும் கிடையாது. ஆனால் ராஜிவை கொல்ல பயன்படுத்திய வெடிகுண்டில் காணப்பட்டது ஆர்டிஎக்ஸ் எனில் இது எங்கிருந்து கிடைத்தது என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆனால் அது நடத்தப்படவில்லை.

அப்படியே நடத்தப்பட்டிருந்தாலும் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துச் சென்று விடுவார்கள் என்று தெரிவித்து அந்த உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.