ட்விட்டர் நிறுவனத்தில் அதிக நேரம் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வலியுறுத்தும் எலோன் மஸ்க்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டிடங்களும் தற்காலிகமாக மூடப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களிடம் கோரிக்கை
நிறுவனத்தின் இரகசிய தகவல்களை பத்திரிகைகள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ட்விட்டரின் புதிய உரிமையாளரான, எலோன் மஸ்க், அந்நிறுவன ஊழியர்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பியுள்ளார்.

அதில் ட்விட்டர் ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் ஒரு நாளைக்கு அதிக மணிநேரம் வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் இது தொடர்பான உறுதிமொழியை வழங்க சம்மதிக்க வேண்டும் என எலோன் மஸ்க், ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த உறுதிமொழிக்கு உடன்படாத ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியத்துடன் சேவையிலிருந்து வெளியேறலாம் என்று எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்