வீட்டிலேயே செய்ய கூடிய உருளைக்கிழங்கு சிப்ஸ்

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 1/2 கிலோ

உப்பு – 1/2 டீஸ்பூன்

தனி மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 150 கிராம்

செய்முறை : உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும். ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் மிளகாய் தூள் கலவையைத் தூவி எல்லா சிப்ஸிலும் நன்றாகப் படும்படி குலுக்கி வைக்கவும். இதோ சுவையான மொறு மொறு சிப்ஸ் ரெடி!!! காற்று புகாத டப்பாவில் போட்டு 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

குறிப்பு : உருளைக்கிழங்கை சீவி நீண்ட நேரம் வைத்தால் நிறம் மாறி போகும், ஆகவே சீவியதும் அதனை ஒரு துணி மேல் பரப்பி உடனே பொரித்து விட வேண்டும்.

துணி மேல் போடுவதால் உருளையில் ஈரம் இல்லாமல், நல்ல மொறு மொறுப்பாக இருக்கும். மிளகாய் தூள் பிடிக்காதவர்கள் மிளகு தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம்.