யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயம்!

கோப்பாய் – திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (05.11.2022) அதிகாலையளவில் நடந்துள்ளது.

பத்தமேனி – அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிந்துயன் என்ற இளைஞரே குறித்த சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

வாள்வெட்டு சம்பவம்
மோட்டார் சைக்கிளில் வந்த மூன்றுபேர் கொண்ட குழுவே இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

படுகாயமடைந்த இளைஞன் தனியார் விடுதி ஒன்றில் காவலராக கடமைபுரிந்து வரும் நிலையில், கடமையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.