பூமியை தாக்கும் குறுங்கோள் கண்டுபிடிப்பு!

சூரியனின் ஒளியில் மறைந்திருக்கும் பூமியை தாக்கும் அபாயம் கொண்ட குறுங்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமி மற்றும் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு இடையில் உள்ள பிராந்தியத்தில் சூரிய அமைப்புக்குள் மறைந்திருக்கும்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு அருகாமையில் உள்ள மூன்று குறுங்கோள்களில் ஒன்றே இவ்வாறு ஆபத்து கொண்டதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளி காரணமாக இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் குறுங்கோள்களை கண்டுபிடிப்பது வானியலாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.