விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள்.

குறிப்பிடத்தக்க உறுதியை வெளிப்படுத்திய அற்புதமான இன்னிங்சிற்காக விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் போட்டிகளிலும் (வெற்றி பெற) வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.