நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ் இந்திய துணைதூதுவர்

யாழ். இந்திய துணைத் தூதுவரான ராகேஷ் நட்ராஜ், நெடுந்தீவுக்கு நேற்று (18.10.2022) விஜயம் மேற்கொண்டதாக யாழ். இந்திய துணைத்தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
யாழ். இந்திய துணைத் தூதுவர், கல்வி, பொது உள்கட்டமைப்பு பற்றி அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலருடனும், சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கல்

இதேவேளை நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இந்திய புலமைப்பரிசில்பற்றி விளக்கமளித்ததோடு, மாணவர்களுக்கு பணப்பரிசில்களையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தீவகப்பகுதிகளில் சீன நாட்டினுடைய ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசப்படும் நிலையில் இந்தியத் துணைத்தூதரின் நெடுந்தீவு விஜயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.