விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அப்படத்தின் அடுத்த அப்டேட்டுகாக காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் ரசிகர்கள் இணையத்தளங்களில் மெர்சல் திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகியுள்ளது குறித்து பதிவுகள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
மெர்சல்
மேலும் இப்படம் குறித்த சுவாரஸ்யமான சில விஷயங்களையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தில் விஜய்யின் பிலாஷ் பேக் காட்சிகளில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன்.
ஆனால் அவர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகியதே நடிகை ஜோதிகாவை தான். ஆனால் அப்படத்தின் கதையில் சில உடன்பாடுகள் அவருக்கு இருந்ததால் இப்படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக ஜோதிகாவே தெரிவித்து இருக்கிறார்.








