கனடாவில் வீட்டு வாடகைகள் அதிகரிப்பு!

கனடாவில் சராசரி வீட்டு வாடகை தொகை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டியலிடப்பட்ட வீடுகளின் வருடாந்த வாடகை அதிகரிப்பு 15.4 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கனடாவில் வீடு ஒன்றின் சராசரி மாதாந்த வாடகை தொகை 2043 டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னர் கடந்த செப்டம்பர் மாதத்தில் வருடாந்த வாடகை தொகை அதிக அளவில் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தேசிய வாடகை அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தை விடவும் செப்டம்பர் மாதத்தில் வீட்டு வாடகை தொகை 4.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நாட்டில் பணவீக்க அதிகரிப்பு காரணமாக வங்கி வட்டி வீதங்கள் உயர்வடைந்துள்ளது.

இதனால் வீடுகள் வாடகைக்கு பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்படுகிறது.

கனடாவின் அனேக பகுதிகளில் வீட்டு வாடகை தொகை வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் நோவா ஸ்கூட்டியாவில் சராசரி வாடகைக்கு 2453 டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்தத் தொகை 2682 டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோ மாகாணத்தில் இந்தத் தொகை 2451 டாலர் என தெரிவிக்கப்படுகிறது.

சஸ்கட்ச்வானில் சராசரி வாடகை தொகை குறைவாக காணப்படுகிறது, இங்கு சராசரி வாடகை தொகை 1069 டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வாடகைத் தொகை மிகவும் அதிகமான நகரமாக வான்கூவார் காணப்படுகிறது இந்தப் பகுதியில் சராசரி வாடகை தொகை 2590 டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.