அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க திட்டம்!

இலாபத்தில் தற்போது இயங்கி வரும் அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் போது அரச வங்கிகளே உதவுகின்றன

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க கூறியுள்ளார்.

அரச வங்கிகளின் 20 வீத பங்குகளை விற்பனை செய்ய திட்டம்

நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அத்தியவசிய மருந்துகள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதியுதவிகளை அரச வங்கிகளே வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், அரச வங்கிகளின் 20 வீத பங்குகளின் உரிமையை ஊழியர்கள் மற்றும் வைப்புச் செய்துள்ளவர்களுக்கு வழங்குவதாக கூறி, வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் ரஞ்சன் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.