புரட்டாசியில் பெருமாளை வழிபடுவதற்கு உரிய காரணம் என்ன தெரியுமா?

புரட்டாசி என்றதுமே நம் நினைவுக்கு வருவது விஷ்ணு பகவானுக்கான ஆராதனைதான். சூரியன், எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய தேவதைகளை வழிபடுவது நம் மரபு.

ஒவ்வொரு ராசிக்கும் – மாதத்துக்கும் உரிய அதிதேவதையை – தெய்வங்களை நமது சமயம் சுட்டி காட்டுகிறது. குறிப்பிட்ட அந்த தேவதையை முறைப்படி வழிபடுவதால், நம் வாழ்வுக்கு தேவையான வளங்களையும் மோட்சம் என்று சொல்லக்கூடிய உயர்ந்த பலனையும் ஒரு சேர அடையலாம்.

அந்த வகையில், புத்திக்கு அதிபதியான புதன் பகவானின் மிதுனம், கன்னி எனும் இரு வீடுகளில், புதன் உச்சம் அடைந்து இருக்கும் கன்னி ராசியில், சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் அதிதேவதையான மகாவிஷ்ணுவை வழிபடுவது உயர்ந்த பலன்களைப் பெற்றுத் தரும்.