நண்பன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தளபதி விஜய்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் நண்பன்.

இப்படத்தில் விஜய்யுடன் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

ஹிந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆக இருந்தாலும், விஜய்யின் மாறுபட்ட நடிப்பு இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக அமைந்தது.

முதல் சாய்ஸ்
இந்நிலையில், இப்படத்தில் விஜய் நடித்த கோஸ்ட்ஸிவ் பசப்புகழ் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா தானாம்.

ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் சூர்யா கமிட்டாகவில்லையாம். இதன்பின், இப்படத்தில் விஜய் நடித்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.