க/பொ /தா உயர் தரத்தில் உள்ளடக்கப்படும் மற்றுமோர் பாடம்!

க/பொ /தா உயர் தரத்தில் விளையாட்டு பாடத்தை உள்ளடக்குவதற்கு தேவையான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.