விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி!

விருதுநகர் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெருவில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சப்பரம் வளைவில் திரும்பியபோது மரத்தின் மீது மோதியதால் விளம்பர பலகை சாய்ந்து விழுந்து மின்சாரம் தாக்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.