விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை செய்முறை

தேவையான பொருட்கள்

கம்பு – ஒரு கப்,

தினை – ஒரு கப்,

கேழ்வரகு – ஒரு கப்,

ஏலக்காய் – 4,

கருப்பட்டி – 3 கப்,

தேங்காய்த் துருவல் – 1 1/2கப்

செய்முறை

கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும்.

தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டையாகப் பிடிக்க வேண்டும். அவற்றை இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும். இப்போது சூப்பரான சத்தான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி