வியாழனின் சமீபத்திய படங்கள்! நாசா வெளியீடு

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழனின் சமீபத்திய படங்கள் சிலவற்றை நாசா வெளியிட்டுள்ளது.

நாசா வெளியிட்ட புகைப்படங்களில் வியாழனின் கொந்தளிப்பான வளிமண்டலத்தைக் குறிக்கும் வெவ்வேறு வண்ணங்களின் சுழல்களுடன், விண்வெளியின் கறுப்புப் பின்னணியில் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகத்தின் கலவையை அதன் முதல் படம் காட்டுகிறது.

நாசாவின் கூற்றுப்படி, ஒரு மணி நேரத்திற்கு 250 மைல்களுக்கு மேல் காற்றை உருவாக்கக்கூடிய மற்றும் பூமியின் விட்டம் 1.3 மடங்கு அதிகமாக இருக்கும் புகழ்பெற்ற பெரிய சிவப்பு புள்ளியும் இங்கே தெளிவாகத் தெரிகின்றது.

மேலும் சூரிய ஒளி இங்கு பிரதிபலிப்பதாலும், அதிக உயரத்தில் அமைந்திருப்பதாலும் புகைப்படத்தில் அந்த இடம் வெள்ளை நிறத்தில் தெரிகின்றது.