யாழிலிருந்து பயணித்த புகையிரதத்திற்குள்மோதலில் ஈடுபட்ட நால்வர் கைது!

காங்கேசன்துறையில் இருந்து காலி நோக்கி பயணித்த மஹவ புகையிரதத்தில் மோதலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கசந்துறையிலிருந்து காலி நோக்கிச் செல்லும் புகையிரதத்தில் ஏறிய மூவர், புகையிரத இருக்கை தொடர்பில் நபருடன் தகராறு செய்துள்ளனர்.

மேலும் குடிபோதையில் புகையிரதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது புகையிரதத்தில் இருந்த மற்றொரு நபர் அவர்களை தாக்கினார். பின்னர், புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 26, 28 மற்றும் 57 வயதுடைய மஹவ மற்றும் கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.