சினிமாவில் பெண்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லை. தமன்னா ஆதங்கம் !

நடிகை தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவருக்கு தற்போது தமிழில் மார்க்கெட் இல்லை என்றாலும், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.

[0DCTTQ ]

அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த F3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை தமன்னா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பலருக்கும் சற்று ஷாக் கொடுத்துள்ளது.

அவர் கூறியதாவது :

சினிமாவில் பெண்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லை. பெண்கள் பேச்சை மதிக்க மாட்டார்கள். ஏன், ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதியை கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை.

போஸ்டரில் ஹீரோயின்கள் முகம் வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ப்ரோமோஷன் நிகழ்விற்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியும், ஹீரோயின் வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியும் விமர்சம் செய்கிறார்கள் . இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

தமன்னாவின் இந்த பேச்சு திரையுலகில் பெரும் பரபரப்பை எற்ப்படுத்தியுள்ளது.