கொரோனோ தொற்றால் சீனாவின் முக்கிய நகரம் ஒன்று முடக்கம்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சீனாவின் ஹைனான் தீவில் அமைந்துள்ள சுற்றுலத் தலமான சன்யா நகரில் ஒரே நாளில் ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா உறுதியானதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதோடு, சான்யாவில் உள்ள ஃபீனிக்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு, சன்யாவுக்கு வரும் விமானங்களும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

இதனால், அங்கு சுமார் 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.