கொதிக்கும் கூழினுள் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கோவிலில் கடந்த வெள்ளியன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை வைத்து அம்மனுக்கு கூழ் காய்ச்சும் பணி நடைபெற்றுள்ளது.

அப்போது முத்துக்குமார் என்கின்ற நபர் எதிர்பாராதவிதமாக வலிப்பு வந்ததால் நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்து உயிரிழந்துள்ளார்.