மட்டக்களப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து டீசல் கடத்த முற்ப்பட்டவர்கள் கைது!

மட்டக்களப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து டீசல் கடத்த முற்பட்டவர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டு.வாழைச்சேனை மீன்பிடி துறைமுக எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த சந்தேகநபர்கள் டீசலை சட்டவிரோதமாக கொள்கலன்கலில் நிரப்பியுள்ளனர்.

கொள்கலன்கலில் நிரப்பிய டீசலை வாகனங்களில் ஏற்றி கடத்த முற்பட்ட வேளையே குறித்த 7 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பொலிஸ் முற்றுகை
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் மற்றும் கூளர் ஆகிய இரு வாகனங்களையும் 1500 லீட்டர் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்கள் ஒலுவில் துறைமுகத்திற்கு டீசலை எடுத்து செல்லும் போர்வையிலேயே இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.