தித்திப்பான நேந்திரம் பழ பஜ்ஜி

தேவையான பொருட்கள்

நேந்திரம் பழம் – ஒன்று

மைதா மாவு – அரை

கப் உப்பு – ஒரு சிட்டிகை

சர்க்கரை(சீனி) – 2 1/2 தேக்கரண்டி

சமையல் சோடா – 2 சிட்டிகை

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

நேந்திரம் பழத்தை தோல் நீக்கி வட்டமாக அல்லது நீளமாக அரை செ.மீ கனத்தில் வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் நேந்திரம் பழ துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். மிதமான தீயில் வைத்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமானதும் எடுத்து விடவும். இப்போது சூடான சுவையான நேந்திரம் பழ பஜ்ஜி தயார்.