ஒலியை விட 5 மடங்கு வேகம் கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை பரிசோதித்த அமெரிக்கா

அமெரிக்கா, ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, “ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்து பார்க்கப்பட்டது.

இது வெற்றிகரமாக அமைந்தது. 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இதுவாகும்” என்று தெரிவித்துள்ளது. ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது.

இவ்வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வளி மண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் ஆற்றல் கொண்டவை.