இத்தாலி பிரதமர் பதவி விலகினார்!

ஆளும் கட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணியில் உள்ள கட்சி ஒன்று பங்கேற்காததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி(Mario Draghi)தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அதிபரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். இத்தாலி நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும்கூட்டணி கட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அப்போது ஆளும் கூட்டணியில் உள்ள பெரியக் கட்சிகளில் ஒன்றான Five Star movrment கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் ஆளும் கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரதமரின் ராஜினாமாவை அதிபர் நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.