கொரொனோவால் பாதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு நுரையீரல் பாதிப்பு!

கொரோனா தொற்றால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 10 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடற்சோர்வு காரணமாக பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உடல் பரிசோதனைக்காக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்த நிலையில் அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.

முதலமைச்சருக்கு நுரையீரல் பாதிப்பு
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சளி இருப்பதாகவும்,10 சதவீதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நுரையீரல் பாதிப்புக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.