தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முக கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருப்போம் என பதிவிட்டுள்ளார்