தமிழகத்திம் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்தனர்.
இது தொடர்பாக வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டு சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு தற்போது அவர் 4 ஆண்டு சிறைக்காலம் முடிந்து வெளியே உள்ளார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை தி நகரில் உள்ள சசிகலா பினாமி பெயரில் செயல்பட்ட ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தை முடக்கியது.
அதன்படி, சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, வருமான வரித்துறை அவரது சொத்துகளை முடக்கியுள்ளது.
அதற்கமைவாக இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்படத்தக்கது.