முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

முல்லைதீவில் பாடசாலை ஆசிரியர்களால் மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

இக் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று முல்லைத்தீவு நகரப் பகுதியில் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீதி கோரி போராட்டம்

மாணவிகளை பாலியல் துஷ்பியோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிலையில் மாணவிகளுக்கு நீதி கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மாணவிகள் முறைபாடு
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு நகரப்பகுதியில் பிரத்தியேக வகுப்பு கொடுக்கும் (கணிதபாடம்) ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 18.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் சம்மந்தப்பட்ட 5 உயர்தர மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.