உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம்

நாம் செய்யும் முறையான உடற்பயிற்சி இந்த 400 தசைகளையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. சைக்கிள் ஓட்டுவது, மைதானத்தில் ஓடி-ஆடி விளையாடுவது, நண்பர்களுடன் குதித்து மகிழ்வது இதுவும் ஒருவகை உடற்பயிற்சிதான் என்றாலும், இவற்றோடு முறையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் முறையான உடற்பயிற்சி இந்த 400 தசைகளையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

உயரமான தோற்றம், வனப்பான உடல் பொலிவை உடற்பயிற்சிகளே நிர்ணயிக்கின்றன என்பதால், உடற்பயிற்சி தவிர்க்கமுடியாத ஒன்றாகிறது.