லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எரிவாயு கப்பல்கள் இரண்டிற்கு நாளைய தினம் தேவையான நிதி செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படும் பட்சத்தில் இடுத்த இரண்டு வாரங்களுக்கு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்த இரண்டு கப்பல்களுக்காக நாளைய தினம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், லிட்ரோ நிறுவனத்திடம் அடுத்துவரும் 6 நாட்களுக்கான எரிவாயு கையிறுப்பில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்றைய தினத்திலும் 80 ஆயிரம் இன்றை தினம் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு 50 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.