சன் டிவியின் பூவே உனக்காக தொடரில் ஹீரோவாக நடித்து வந்தவர் அருண். அவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக அசீம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
சன் டிவி தொடரில் இருந்து வெளியேறிய அருண் ஒரு வெப் சீரிஸில் நடித்தார். அதுவும் ஒரு பிரபல ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது அருண் விஜய் டிவிக்கு தாவி இருக்கிறார். அவர் விஜய் டிவியின் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க களமிறங்கி இருக்கிறார்.
அதை அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார்.
View this post on Instagram







